சுடச்சுட

  

  பூட்டிக்கிடக்கும் வீடுகளில் தொடர் திருட்டு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

  By DIN  |   Published on : 14th June 2018 02:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், குடவாசல் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியப் பகுதிகளில், பூட்டிக்கிடக்கும் வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகியுள்ளது. 
  கொரடாச்சேரியை அடுத்த பெருந்தரக்குடி பிரதான சாலையைச் சேர்ந்தவர் சேகர் (50). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் சொந்த ஊர் வந்த அவர், அண்மையில் கூடுரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டுக்குத் திரும்பியபோது, வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் மாயமாகி இருந்தது.
  மேலும், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்து இரண்டரை பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டிருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சேகர், இதுகுறித்து கொரடாச்சேரி காவல்துறையில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
  கடந்த மே மாதம் 28-ஆம் தேதி கொரடாச்சேரி ஒன்றியம், திருக்கண்ணமங்கையில், பூட்டியிருந்த வீட்டில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் திருட்டுச் சம்பவம் நடைபெற்றிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai