சுடச்சுட

  

  முத்துப்பேட்டையில் துணைமின் நிலையம் அமைக்க இடம் தேர்வு

  By DIN  |   Published on : 14th June 2018 02:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் 110 கிலோவாட் மின்திறன் கொண்ட துணைமின் நிலையம் அமைக்க கோவிலூர் பகுதியில் 1.59 ஹெக்டேர் இடம் தேர்வு செயயப்பட்டு, புதன்கிழமை அளவீடு செய்யப்பட்டது.
  முத்துப்பேட்டையில் தற்போது 33 கிலோவாட் மின்திறன் கொண்ட துணைமின் நிலையம் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குறைந்த மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வந்தது.
  இதைப் போக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் முத்துப்பேட்டையில் 110 கிலோவாட் திறன் கொண்ட  துணைமின் நிலையம் அமைக்க முடிவு செய்து, கோவிலூர் பகுதியில் 1.59 ஹெக்டேர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலத்தை வருவாய்த்துறையினர் அளவீடு செய்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (பொ) ஜான்விக்டர், உதவிப்பொறியாளர் பிரபு உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai