சுடச்சுட

    

    முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    By DIN  |   Published on : 14th June 2018 02:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு  மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா, வங்கி கடனுதவி, வேலைவாய்ப்பு, கண் கண்ணாடி, நிதியுதவி, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 14 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்துக்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
    இதைத்தொடர்ந்து, 2 நபர்களுக்கு கண் கண்ணாடி நிதியுதவியாக ரூ. 9 ஆயிரம் மதிப்பிலான காசோலையும், 2 நபர்களுக்கு ஈமச்சடங்கு நிதியுதவியாக ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான காசோலையும் ஆக மொத்தம் ரூ. 24 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிகழ்வில், முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் வேலு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) குருமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai