சுடச்சுட

  

  வலங்கைமானில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேவையில் குறைபாடு

  By DIN  |   Published on : 14th June 2018 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேவையில் குறைபாடு ஏற்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
  வலங்கைமான் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இங்கு அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வங்கி நடவடிக்கைக்காக வலங்கைமானுக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. இங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் மாத ஊதியமும், ஓய்வூதியர்கள் மாதாந்திர ஓய்வூதியமும், குடும்ப ஓய்வூதியமும் பெற வேண்டிய நிலைவுள்ளது. 
  அரசு ஊழியர்கள் தொடர்பான சேவையிலும், அந்த வங்கி ஊழியர்கள் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிப்பதாக அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் இதைக் கவனித்து வாடிக்கையாளர் சேவையை துரிதப்படுத்திட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai