சுடச்சுட

  

  வேலையில்லா காலத்தில் அரை மாத ஊதியம் கோரி ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 14th June 2018 02:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூரில் நவீன அரிசி ஆலை தரம் உயர்த்தும் கட்டுமானப் பணி முடியும் வரை வேலையில்லா காலத்துக்கு அரை மாத ஊதியம் வழங்கக் கோரி டிஎன்சிஎஸ்சி சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
  நவீன அரிசி ஆலை தரம் உயர்த்தும் கட்டுமானப் பணிகள் தொடங்கியதால், கடந்த ஓராண்டாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 
  இதனால் வேலை இல்லாத காலத்துக்கு அரை மாத ஊதியம் வழங்க வேண்டும், கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் உள்ள நவீன அரிசி ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
  டிஎன்சிஎஸ்சி சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் ஜெ. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கிளைத் தலைவர் பி. பாலு, கிளைச் செயலர் ஏ. செல்வராஜ், பொருளாளர் டி.செல்வம், மாநில பொதுச் செயலர் என். புண்ணிஸ்வரன், டிஎன்சிஎஸ்ஸி தொழிலாளர் சங்க பொதுச் செயலர் எஸ். சந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai