சுடச்சுட

  

  ஓய்வூதியர்களுக்கு 21 மாத நிலுவை தொகையை வழங்கிட கோரிக்கை

  By DIN  |   Published on : 15th June 2018 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஓய்வூதியர்களுக்கு 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டுமென தமிழக அரசுக்கு வலங்கைமான் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வலங்கைமான் வட்டப் பேரவைக் கூட்டம் வட்டத் தலைவர் ஏ. சுப்பிரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். நரசிம்மன் முன்னிலை வகித்தார். சங்க மாநில துணைத் தலைவர் எஸ். புஷ்பநாதன் தொடக்க உரையாற்றினார். ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் குரு. சந்திரசேகரன், சங்க மாவட்டத் தலைவர் எஸ். சீனிவாசன், சத்துணவு ஊழியர் சங்க வட்டத் தலைவர் கே. மாரியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : 
  ஓய்வூதியர்களுக்கு 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். மருத்துவப்படியாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வலங்கைமான் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, இரவு நேரத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் தங்கி பொதுமக்களுக்கு சிகிச்சையளித்திடும் வகையில், மருத்துவ சேவை கிடைத்திட தமிழக அரசைக் கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  வட்டத் துணைத் தலைவர் பி. செல்வராசு வரவேற்றார். வட்டச் செயலாளர் சி. கருப்பையன் வேலை அறிக்கையையும், வட்டப் பொருளாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி நிதிநிலை அறிக்கையையும் வாசித்து உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்றனர். நிர்வாகிகள் ஜெயராமன், ராமச்சந்திரன், கல்யாணி ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். வட்ட இணைச் செயலாளர் எஸ். சாமிநாதன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai