சுடச்சுட

  

  கடல்வாழ் உணவுப் பொருள்கள் விற்பனையாளருக்கு உரிமம் சான்று வழங்கல்

  By DIN  |   Published on : 15th June 2018 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மன்னார்குடி நகராட்சி ஒருங்கிணைந்த நவீன மீன் விற்பனைக் கூடம், கடை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையின் சார்பில், கடல்வாழ் உணவுப் பொருள்கள் விற்பனை செய்வதற்கான உரிமம் சான்று வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
  தாமரைக்குளம் வடகரையில் உள்ள நகராட்சி ஒருங்கிணைந்த நவீன மீன் விற்பனைக் கூட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மீன் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆர். பக்கிரிசாமி தலைமை வகித்தார்.
  நகராட்சி ஆணையர் என். விஸ்வநாதன் கலந்துகொண்டு, நகராட்சி மீன் அங்காடியில் கடை வைத்திருக்கும் மீன் வியாபாரிகளுக்கு, கடல்வாழ் உணவுப் பொருள்கள் விற்பனை செய்ய அனுமதிக்கும் உரிமம் சான்றிதழை வழங்கிப் பேசியது:
  சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்தான் ஒருங்கிணைந்த மீன் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. கடல்வாழ் உணவுப் பொருள்களை 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு கீழ் சேமித்து வைத்து விற்பனை செய்ய வேண்டும். வியாபாரிகள் எக்காரணத்தைக் கொண்டும் பாலித்தீன் பைகளை பயன்படுத்தக் கூடாது. நகராட்சி எல்லைக்குள் தரைக்கடை அமைத்து மீன் வியாபாரம் செய்ய யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்றார்.
  நிகழ்ச்சியில், நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் க. மணாழகன், நகரமைப்பு ஆய்வாளர் ஆர். விஜயகுமார், துப்புரவு ஆய்வாளர் கோ. ராஜேந்திரன், மீன் வியாபாரிகள் சங்கச் செயலர் எம்.எஸ். இளங்கோவன், பொருளாளர் என்.ஜி. முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai