Enable Javscript for better performance
குருபகவான் கோயிலில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    இதையொட்டி, கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், கெஜலெட்சுமி, துர்க்கையம்மன், சண்டிகேஸ்வரர், உத்ஸவ தெட்சிணாமூர்த்தி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai