கூரை வீடு தீக்கிரை
By DIN | Published on : 15th June 2018 08:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மன்னார்குடி அருகே புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கூரை வீடு தீக்கிரையானது.
கோட்டூர் அருகேயுள்ள ஓவர்சேரி திருமணக்குடிதெருவை சேர்ந்தவர் சுமை தூக்கும் தொழிலாளி பீட்டர் (55). இவர், புதன்கிழமை இரவு குடும்பத்தினருடன் கூரை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, திடீரென வீட்டின் கூரை தீப்பிடித்து எரிந்ததையடுத்து அனைவரும் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டனர். தகவலறிந்த கோட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். எனினும் வீட்டிலிருந்து மின்சாதனப் பொருள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன.