சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
  இந்த ஆய்வில் பேரூராட்சி அலுவலக நாளேடு, தன்பதிவேடு, நபார்டு பணிகள் பதிவேடு, ஊழியர் வருகைப் பதிவேடு, சொத்து வரி விதிப்புப் பதிவேடு, அஞ்சல் வில்லைப் பதிவேடு, உள்ளூர் தபால் பதிவேடு, காசோலை பதிவேடு, இருப்புப் பதிவேடு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் பார்வையிட்டார். மேலும், மேல்நிலைத்தொட்டி மூலம் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
  இதைத்தொடர்ந்து, கொரடாச்சேரி ஊராட்சிக்குள்பட்ட சிவன் கோயில் தெருவில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பில், 300 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்த அவர், இதுவரை பயனாளியின் வங்கி கணக்கில் முறையாக அரசின் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார். ஆய்வின்போது, கொரடாச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai