சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், லெட்சுமாங்குடியில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
    லெட்சுமாங்குடியில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா தியான பீடத்தில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு  பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, கோயிலின் நிர்வாகி வி.ஆர். வெள்ளையன் மற்றும் பக்தர்களின் ஏற்பாட்டின்பேரில், ஷீரடி சாய்பாபாவுக்கு அரிசி மாவு, மஞ்சள் பொடி, சந்தனம், தயிர், பன்னீர், இளநீர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட  அனைத்து திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஷீரடி சாய்பாபாவுக்கும், அவரது பாதத்துக்கும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஷீரடி சாய்பாபா சிறப்பு அலங்கார கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    இதேபோல், சித்தாம்பூர் ஷீரடி சாய்பாபா கோயிலிலும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai