சுடச்சுட

    

    ஜூலை 15-க்குள் விடுதிகள் நடத்துவோர் பதிவு செய்து கொள்ள வேண்டும்: ஆட்சியர்

    By DIN  |   Published on : 15th June 2018 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், இல்லங்கள் நடத்துபவர்கள் ஜூலை 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் சிறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணியாற்றும் பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் தங்குகின்றனர். 
    விடுதிகள் மற்றும் இல்லங்களை அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் மற்றும் தனி நபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகின்றன. 
    விடுதிகள், இல்லங்களில் மகளிர் மற்றும் குழந்தைகள் தங்கும்போது பராமரிப்பு பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய  தமிழக அரசால் வழிகாட்டு நெறிமுறைகள், தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குப்படுத்துதல்) சட்டம்  2014 மற்றும் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குப்படுத்துதல்)  விதிகள் 2015 ஆகியன வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, நடைமுறையிலுள்ள இச்சட்டத்தின்படி மகளிர் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதி நடத்துபவர்கள் மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்து நடத்த வேண்டும். விடுதிகள், இல்லங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், சட்டம் மற்றும் விதிகள் போன்ற விவரங்கள் d​c‌p‌s‌t‌v‌r@‌g‌m​a‌i‌l.​c‌o‌m என்ற மாவட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
    எனவே, சட்ட நடைமுறைகளின்படி பதிவு பெறுவதற்காக மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், இல்லங்கள் நடத்துபவர்கள் ஜூலை 15 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பதிவு பெறாமல் இயங்கும் விடுதிகள், இல்லங்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
    மேலும் விவரங்களுக்கு, ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை அணுகி தெரிந்து கொள்ளலாம். 04366 - 226299, 9790052827 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai