சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 16) மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படுவதாக திருத்துறைப்பூண்டி உதவி செயற்பொறியாளர் (பொ) எஸ். ஜான் விக்டர் தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக அவர் கூறியது :
  தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், திருத்துறைப்பூண்டி உள்கோட்டத்துக்குள்பட்ட பள்ளங்கோயில் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை திருத்துறைப்பூண்டி, வேளூர், பாண்டி, குன்னலூர், எடையூர், சங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், கோட்டூர், விளக்குடி, பள்ளங்கோயில், ஆலிவலம், ஆண்டாங்கரை, குன்னூர், பாமணி, கொக்காலடி உள்ளிட்ட பகுதிகளிலும், பெருகவாழ்ந்தான் துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai