Enable Javscript for better performance
தேசியப் போட்டிகளில் வென்றவர்கள் உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    தேசியப் போட்டிகளில் வென்றவர்கள் உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 15th June 2018 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்றவர்கள் உதவித்தொகைப் பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2017-2018-ஆம் ஆண்டு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க தொகை வழங்கப்படவுள்ளது. தங்க பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ. 6 ஆயிரமும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ. 4 ஆயிரமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரமும் வழங்கப்படவுள்ளன. 
    எனவே, திருவாரூர் மாவட்டத்தில் 2017-18 ஆம் ஆண்டில் தேசிய அளவிலான போட்டிகளில் (ஏப்ரல்-2017 முதல் மார்ச் 2018 வரை) பங்கேற்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்களது பெயர், முழுமுகவரி மற்றும் சான்றிதழ்களின் நகல் ஆகியவற்றை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஜூலை 25-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலத்தை 04366-227158 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai