Enable Javscript for better performance
நீடாமங்கலத்தில் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலத்தில் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 15th June 2018 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, நீடாமங்கலத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நீடாமங்கலம் வட்டக் கிளை சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட துணைத் தலைவர் டி. அழகர் தலைமை வகித்தார். வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வன், அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் கௌதமன் மற்றும் பல்வேறு சங்கங்கங்களின் நிர்வாகிகளான ராமகிருஷ்ணன், இளமாறன், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில் பெண்கள் உள்பட சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு, வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசாணை எண் 56 ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். முன்னதாக, ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai