சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே போலீஸ் வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
     திருவாரூரை அடுத்த அய்யம்பேட்டை மானந்தங்குடியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் குமார் (42), பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த நாகப்பன் மகன் அன்பழகன் (30), நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் முத்துக்குமார் (38). 
    இவர்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் பூந்தோட்டம் வழியாக புதன்கிழமை சென்று கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வந்த போலீஸ் வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே குமார் உயிரிழந்து விட்டார். காயமடைந்த அன்பழகன், முத்துக்குமார் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், பேரளம் போலீஸார் வழக்குப் பதிந்து போலீஸ் வாகனத்தை ஓட்டிய முருகன் என்பவரை கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai