Enable Javscript for better performance
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து சாதித்தது என்ன ? கே. பாலகிருஷ்ணன்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து சாதித்தது என்ன ? கே. பாலகிருஷ்ணன்

    By DIN  |   Published on : 15th June 2018 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழக அரசு சாதித்தது என்ன என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன். 
    நீடாமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற, மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மக்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தீர்வு காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலம் தழுவிய போராடுவோம் தமிழகமே பயணக் குழு வரவேற்பு பிரசார இயக்க கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: 
    மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறார்கள். பிரதமர் மோடி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மோடி அரசில் விலைவாசியும், பெட்ரோல், டீசல் விலையும் குறையவில்லை. கருப்பு பணத்தை ஒழிக்கவில்லை. படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்ற வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்கிறார்கள். அப்படி இணக்கமாக இருந்து என்ன சாதித்தார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அடக்குமுறை ஆட்சியை எடுத்துக்காட்டுகிறது என்றார் பாலகிருஷ்ணன். 
    கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலர் சோம. ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ. மாரிமுத்து, மாவட்டச் செயலர் ஜி. சுந்தரமூர்த்தி, மாநில நிர்வாகி ஐ.வி. நாகராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் நா. பாலசுப்பிரமணியன், கே.கைலாசம், நகரச் செயலர் ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai