சுடச்சுட

  

  மன்னார்குடி நகராட்சியில் மக்கும் குப்பையை கலவை உரமாக மாற்றும் திட்டம் தொடக்கம்

  By DIN  |   Published on : 15th June 2018 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் குப்பை சேகரிக்கும் இடத்திலேயே மக்கும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு, அதே இடத்திலேயே கலவை உரமாக மாற்றும் திட்டம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
  நான்காவது வார்டுக்கு உள்பட்ட இந்திரா நகரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர்நல அலுவலர் எஸ்.ஆர். சந்திரசேகர் தலைமை வகித்தார். மக்கும் குப்பையை கலவை உரமாக மாற்றும் பணியை நகராட்சி ஆணையர் என். விஸ்வநாதன் தொடங்கி வைத்துப் பேசியது:
  தூய்மை பாரத இயக்கம் மூலம் இத்திட்டம் முதல் கட்டமாக இந்திராநகரில் தொடங்கப்படுகிறது. இதை மேலும் விரிவுபடுத்தி நகராட்சி பகுதியில் 14 இடங்களில் அமைக்கப்படவுள்ளது.
  குப்பை உருவாகும் பகுதியில், அதை மக்கும் தன்மை, மக்கா தன்மை என இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. இதில் மக்கும் தன்மையுள்ள குப்பைகளை அதே இடத்தில் திடக்கழிவு மேலாண்மை மூலமாக மக்கக்கூடிய கலவை உரமாக மாற்றப்படுகிறது. மக்கா தன்மை கொண்ட குப்பைகளை நகராட்சி குப்பை கிடங்குக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் அவை, தனியார் சிமென்ட் ஆலைக்கு அவர்களின் சொந்த செலவில் வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர் என்றார்.
  நிகழ்ச்சியில், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஜி. ராஜேந்திரன், சு. பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai