சுடச்சுட

    

    முத்துப்பேட்டை அருகே சாலையோர மின் கம்பத்தில் வியாழக்கிழமை அதிகாலை கார் மோதிய விபத்தில்  3 இளைஞர்கள் காயமடைந்தனர்.
    நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்கு பொய்கைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆகாஸ் (30), மதன் (28), பாவேந்தன் (32). இவர்கள் மூவரும் ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு,  காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். 
    வியாழக்கிழமை அதிகாலை முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை ஆலங்காடு பாரைக்குளம் பிரிவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மின் கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் மூவரும் படுகாயடைந்தனர்.
     இதையறிந்த அப்பகுதி மக்கள், மூவரையும் மீட்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து முத்துப்பேட்டை போலீஸார், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  இந்த விபத்தால், முத்துப்பேட்டை பகுதியில் சுமார் 4 மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai