சுடச்சுட

  

  முன்விரோதத்தால் சுவாமி சிலைகளுக்கு அவமதிப்பு: கோயில் உண்டியல் உடைப்பு

  By DIN  |   Published on : 15th June 2018 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே இருசமூகத்தினரிடையே உள்ள முன்விரோதம் காரணமாக ஒரு சமூகத்தினருக்குச் சொந்தமான கோயிலின் சுவாமி சிலைகளுக்கு அவமதிப்பு செய்திருப்பதுடன், கோயில் உண்டியலையும் உடைத்து காணிக்கையை திருடிச் சென்றிருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.
  மன்னார்குடி அருகேயுள்ள வல்லூர் நடுத்தெருவில் ஒரு சமூகத்துக்குச் சொந்தமாக உள்ள வடிவாச்சியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றதையொட்டி, கோயிலை பராமரிக்கும் பணியில் அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஜூன் 4-ஆம் தேதி ஈடுபட்டிருந்தனர். 
  அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதில் கோயில் விழா ஏற்பாடு செய்து வரும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டனராம். இதுகுறித்து  திருமக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் புதன்கிழமை நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
  இக்கோயில் திருவிழா நிறைவுபெற்று இரண்டு நாள்கள் ஆன நிலையில், வியாழக்கிழமை காலையில் கோயிலுக்கு வந்தவர்கள் பார்த்தபோது, மின்னடியான் சிலையின் கழுத்தில் மஞ்சல் கயிறு கட்டப்பட்டிருந்ததும், அருகிலிருந்த வடிவாச்சியம்மன் சிலைக்கு அணிவித்திருந்த சேலை துணி கலைக்கப்பட்டு, சுவாமி கையில் வைத்திருந்த சூலம் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக கத்தி செறுகிவைக்கப்பட்டிருந்ததும், கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சில்வர்குடம் உண்டியலும் உடைக்கப்பட்டு, பூஜைப் பொருள்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 
  இதுகுறித்த புகாரின்பேரின் திருமக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai