சுடச்சுட

  

  "ரத்த தான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்'

  By DIN  |   Published on : 15th June 2018 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரத்த தான விழிப்புணர்வை ஏற்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம். 
  உலக ரத்த கொடையாளர் தினத்தையொட்டி, திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது: இருதினங்களுக்கு முன் திருவாரூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தான இயக்கத்தில் பங்கேற்று ரத்த தானம் செய்த 51 பேர் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்துள்ளனர். இதன்மூலம் ரத்த தானம் செய்வதால் எவ்வித பின்விளைவும் ஏற்படுவதில்லை என்பதை அறியலாம். விபத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கையும் ரத்த சோகை நோய்களும் ரத்தத்தின் தேவையை அதிகமாக்கி உள்ளன. எனவே, ரத்த தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் மீனாட்சிசுந்தரம். 
  விழாவில், கடந்த ஆண்டு அதிக முறை ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ரத்த தான முகாம் நடைபெற்றது. முன்னதாக திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ரத்த தான விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai