சுடச்சுட

  

  மன்னார்குடியில் அரசுப் பேருந்து நடத்துநரிடம் தகராறு செய்து தாக்கிய இளைஞர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். 
  மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து விக்கிரப்பாண்டியத்துக்கு வியாழக்கிழமை இரவு 9 மணிக்குப் புறப்பட வேண்டிய அரசு நகரப் பேருந்து, பழுதானதால் சரி செய்யப்பட்டு அரை மணி நேரம் தாமதமாக 9.30 மணிக்கு மன்னார்குடி பேருந்து நிலையத்துக்கு வந்தது. இதனால், அந்த பேருந்துக்கு காத்திருந்த கோட்டூரை அடுத்த வீராக்கி, காலனி தெருவைச் சேர்ந்த மா. சிலம்பரசன் (27), பேருந்து நடத்துநர் கா. பிரபாகரனிடம் வாக்குவாதம் செய்தாராம். அப்போது, ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிலம்பரசன், பிரபாகரனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 
  இதுகுறித்து, மன்னார்குடி காவல் நிலையத்தில் பிரபாகரன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து சிலம்பரசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai