சுடச்சுட

  

  உடைந்த மரப்பாலம் சீரமைக்கப்படாததால் கிராம மக்கள் அவதி

  By DIN  |   Published on : 16th June 2018 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கூத்தாநல்லூர் அருகே மரப்பாலம் உடைந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாததால் அப்பகுதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  கூத்தாநல்லூர்- கொரடாச்சேரி செல்லக் கூடிய வழியில், அத்திக்கடையில் தட்டிப்பாலம் என்கிற மரப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. வெள்ளாற்றில் அமைக்கப்பட்டிருந்த இந்த பாலம் அத்திக்கடை பஞ்சாயத்தையும், அதங்குடி பஞ்சாயத்தையும் இணைக்கும் பாலமாக இருந்தது. இதன் வழியாகத்தான் நல்லவளாம்பேத்தி கிராமத்தில் வசிக்கும் 150 குடும்பத்தினர், வெண்ணவாசல் கிராமத்தில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும்  அதங்குடி கிராமத்தில் வசிக்கும் 1,120 குடும்பத்தினர் என மொத்தம் 1,500 குடும்பங்களைச்  சேர்ந்தவர்கள் சென்று  வந்தனர். இந்த தட்டிப்பாலத்தை பள்ளி, கல்லூரி மாணவர்களும், வேலைக்குச்  செல்பவர்களும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்தப்  பாலம் உடைந்து, பல மாதங்களாகியும் சரி செய்யப்படாமல்  உள்ளது.  இதனால், வரும் மழை காலத்தில் மேற்கண்ட கிராமத்தினர் சிரமப்படும் நிலை ஏற்படும். வெள்ளாற்றில் தண்ணீர் வந்தால் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள வாழாச்சேரி பாலத்தின் வழியாகத்தான் செல்லவேண்டிய நிலை ஏற்படும். எனவே, இந்த பாலத்தை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  இதுகுறித்து, அதங்குடி கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர்  கூறியது:
  இந்த பாலத்தை  சரி செய்யக் கோரி, இதுவரை யாரும் கோரிக்கை  வைக்கவில்லை. இந்தத்  தட்டிப்பாலத்தை, அத்திக்கடை  ஜமாத்திலிருந்துதான்  கட்டிக் கொடுப்பார்களாம். இந்தப் பாலம் குறித்து, மனு அளித்தால்  நடவடிக் கை  எடுக்கப்படும்  என்றார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai