Enable Javscript for better performance
கூட்டுறவு பண்டகசாலை பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் அண்ணா சதுக்கம் அருகில் கூட்டுறவுத் துறையின் திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்து முதல் விற்பனையை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
    நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல் ராஜ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பேசியது :  திருவாரூர் கூட்டுறவு நுகர்வோர் பண்டக சாலையானது மாவட்டத்திலுள்ள 138 இணைப்புச் சங்கங்களுடன் இணைந்து 602 முழு நேர நியாயவிலைக் கடைகளுக்கும், 114 பகுதி நேர கடைகளுக்கும் அத்தியாவசியப் பொருள்களுக்கான நுகர்வு பணியினை மேற்கொண்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 20 நியாயவிலைக் கடைகளும், 2 மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களும்,  ஒரு சிறப்பு சிற்றங்காடியும்,  2 சுய சேவைப்பிரிவுகளும், 2 கூட்டுறவு மருந்து விற்பனைப் பிரிவுகளும், அம்மா மருந்தகம் இரண்டும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 20 நியாயவிலைக் கடைகளையும், திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையானது நடத்தி வருகிறது. இந்த பெட்ரோல், டீசல் நிலையமானது மென்மேலும் வளர அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
    நிகச்சியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரவிச்சந்திரன்,  கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன், திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள், இந்தியன் ஆயில் கழக விற்பனை அலுவலர் சரில் சாஜ், மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் அர்ச்சுனன், கமலாம்பிகா கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.டி. மூர்த்தி, மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் மணிகண்டன், துணைப்பதிவாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai