சுடச்சுட

  

  கொலை வழக்கு குற்றவாளி தலைமறைவு: கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நீதிமன்ற உத்தரவு

  By DIN  |   Published on : 16th June 2018 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தலைமறைவு குற்றவாளி தொடர்பாக நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு, கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டது.
  கூத்தாநல்லூர் வட்டம், அன்வாரியாத் தெருவைச் சேர்ந்த அகமது ஷா  என்பவரது மகன் அனஸ்மைதீன். இவர் மீது கடந்த  2009- ஆம்  ஆண்டு,  அதே பகுதியைச் சேர்ந்த அப்துல்சலாம்  மகன் நூர்முகம்மது கொலை   செய்யப்பட்ட வழக்கு உள்ளது. 
  இந்த வழக்கின் விசாரணை, திருவாரூர் முதன்மை மாவட்ட  அமர்வு நீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனஸ்மைதீன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.  இதனால்,  அவர் மீது பிணையில் வெளிவர முடியாத  பிடியாணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த ஆணையின் நகல் கூத்தாநல்லூர் போலீஸாரால், கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai