சுடச்சுட

  

  திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் சுகாதார மையம் திறப்பு

  By DIN  |   Published on : 16th June 2018 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் சுகாதார மையம் அண்மையில் திறக்கப்பட்டது. 
   இந்த சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக ரூ. 25 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், ரத்தம், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகள் குறித்து சோதனைகள் செய்யக்கூடிய வகையில் ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு ஆம்புலன்ஸ், நான்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள், மூன்று ஊழியர்கள் உள்ளிட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
  இந்த மையத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.பி. தாஸ் திறந்து வைத்தார். பதிவாளர் எஸ். புவனேஸ்வரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai