சுடச்சுட

  

  திருவாரூர் அருகேயுள்ள உள்ளிக்கோட்டை  தென்னை விவசாயிக்கு  இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 2 லட்சத்து 10,000 வழங்கவேண்டும் என, திருவாருர் நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
  திருவாரூர் மாவட்டம், உள்ளிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (79). தென்னை விவசாயி. இவர், உள்ளிக்கோட்டை கிராமத்தில் 700 தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து, 2011முதல் பிரிமீயத் தொகை செலுத்தி வந்துள்ளார். 2014-15 ஆம் ஆண்டில் புயல் மற்றும் நோய்த் தாக்குதலில் 31 தென்னை மரங்கள் பாதித்தன. 
  இந்த மரங்களுக்கு உரிய இழப்பீடு பெற இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உரிய ஆவணங்களை அளித்து இழப்பீடு கோரினார். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
  பின்னர், இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பரிந்துரையின்படி மன்னார்குடி வேளாண் இணை இயக்குநர் தென்னை மரங்களை ஆய்வு செய்து 31 மரங்கள் மட்டுமன்றி கூடுதலாக 9 மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் பரிந்துரைத்தார். அப்போதும் காப்பீடு வழங்கப்படவில்லை.
  இதையடுத்து, திருவாரூர் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் மூலம் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த திருவாருர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு ரூ. 60,000, மன உளைச்சல் மற்றும் இழப்பீடாக ரூ. 1 லட்சத்து 50, 000, வழக்கு செலவுக்கு ரூ. 2,000 வழங்க உத்தரவிட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai