சுடச்சுட

  

  பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து, கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு, வட்டாட்சியர் செல்வி தலைமை வகித்தார். மண்டல  துணை வட்டாட்சியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வட்டாட்சியர் 
  பேசியது:
  கடந்த  காலங்களில் நிஷா, தானே உள்ளிட்ட புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளை நினைவில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  கிராமப்  பகுதிகளில் உள்ள பள்ளிக் கட்டடங்கள், கல்லூரிகள், சமுதாயக் கூடங்கள், கல்யாண மண்டபங்கள்  உள்ளிட்ட அனைத்து தங்கும் இடங்களையும் சுத்தப்படுத்தி, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரி உரிமையாளர்களின் செல்லிடப்பேசி எண்களையும் வாங்கி தயார் நிலையில் இருக்க  வேண்டும். 
  தூர்வாரப்படாத குளங்களை உடனடியாக தூர்வார வேண்டும். சாய்ந்துள்ள மற்றும் பழுதடைந்துள்ள  மின்கம்பங்களை சீரமைக்க உரிய நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என கிராம நிர்வாக அலுவலர்களைக் கேட்டுக்கொண்டார்.
  இக்கூட்டத்தில் தனித்துணை வட்டாட்சியர் சரவணன், நில அளவையர் மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர்கள் ராஜேஸ்வரி (கூத்தாநல்லூர்), சத்யா (கமலாபுரம்) , அசோகன் (வடபாதிமங்கலம்)  மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai