Enable Javscript for better performance
ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 17th June 2018 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    இதை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத அபயவரதராஜப் பெருமாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.
    இதேபோல், நீடாமங்கலம் வீரஆஞ்சநேயர் கோயில், சந்தானராமர் கோயில், திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai