சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக விஷம் குடித்த 5 மாத கர்ப்பிணி, மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார்.
  மகாதேவப்பட்டணம் தேவன் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும், சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த சேகர் மகள் திலகாவுக்கும் (26) கடந்த ஜனவரி 28-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திலகா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
  இந்நிலையில், வெள்ளிக்கிழமை திருமக்கோட்டையில் நடைபெற்ற உறவினர் வீட்டு விழாவுக்குச் செல்வது தொடர்பாக கணவன்- மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த திலகா, விஷம் குடித்து மயங்கினார். இதைத்தொடர்ந்து, அவர் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை உயிரிழந்தார்.
  இதுகுறித்து பரவாக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியரின் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai