சுடச்சுட

  

  கூத்தாநல்லூர் வட்டத்தில் 34 பள்ளி வாயில்களில் ரமலான் தொழுகை: 25 ஆயிரம் பேர் பங்கேற்பு

  By DIN  |   Published on : 17th June 2018 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கூத்தாநல்லூர் வட்டத்தில் 34 பள்ளி வாயில்களில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்று தொழுகை நடத்தினர்.
  இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில், முதன்மையானப் பண்டிகையான ஈகைப் பெருநாள் என்னும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் 30 நாள்கள் நோன்பு இருப்பார்கள். 30-ஆவது நாளான ரமலான் பெருநாள் அன்று காலை வழக்கம்போல் குளித்துவிட்டு, புத்தாடைஅணிந்து தொழுகைக்காக பள்ளி வாயிலுக்குச் செல்வார்கள்.
  அதன்படி, நிகழாண்டு ரமலான் பெருநாளான சனிக்கிழமை காலை, கூத்தாநல்லூர் வட்டத்தில் உள்ள 34 பள்ளி வாயில்களில் சிறப்புத் தொழுகை நடத்தினர். சின்ன சிங்கப்பூர் என்றழைக்கப்படும் கூத்தாநல்லூரில் பெரியப்பள்ளி வாயில், மஸ்ஜித் கதிஜா, மேலப்பள்ளி, ரஷிதியா பள்ளி, ஹமீதிய்யா பள்ளி, அன்வாரியா பள்ளி, மஸ்ஜிதுல் ஹீதா, ரஹீமிய்யா பள்ளி, சிஷ்தி நகர் பள்ளி, என்.ஆர்.ஐ. பள்ளி, தைக்கால் பள்ளி, மஸ்ஜித் பாத்திமா பீவி, சின்னப்பள்ளி, மஸ்ஜிதுன் நியாஸ், பதுரிய்யா பள்ளி, மஸ்ஜிதுன் நூர், பாத்திமீய்யா மரக்கடைப் பள்ளி உள்ளிட்ட 18 பள்ளி வாயில்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொழுகை நடத்தினர்.
  இதேபோல், பொதக்குடி யில் 5 பள்ளி வாயில்கள், அத்திக்கடை மற்றும் பாலக்குடியில் 5, பூதமங்கலத்தில் 2, தண்ணீர்குண்ணம், நாகங்குடி, கொரடாச்சேரி, அபிவிருத்தீஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் தலா 1 என மொத்தம் 34 பள்ளி வாயில்களிலும், பொதக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்திலும் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
  இதில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தொழுகைக்குப் பின்னர், ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai