சுடச்சுட

  

  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும்: அமைச்சர் ஆர். காமராஜ்

  By DIN  |   Published on : 17th June 2018 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும்போது, விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் என்றார் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ்.
  திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடியை அடுத்த அகரமேடு பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ், நாட்டாற்றின் குறுக்கே பில்லூர், கடுவங்குடி இடையே ரூ .89 லட்சம் மதிப்பில் பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுவருகிறது. இப்பணியை சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது:
  திருவாரூர் மாவட்டத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் ரூ.1,566 கோடி நிதியை பெற்றுத் தற்போது ரூ. 900 கோடிக்கு ஆறுகள் மற்றும் கிளை ஆறுகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடுவூர் ஏரியை பொதுப்பணித் துறை, வனத்துறை இணைந்து விரைவில் தூர்வார உள்ளன.
  காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த ஆண்டு இயற்கையும் ஒத்துழைத்து நல்ல மழை பெய்து வருவதால், கர்நாடகத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
  தமிழகம் வந்து சென்ற அம்மாநில முதல்வர் குமாரசாமி, அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பிவருவதை சுட்டிக்காட்டியுள்ளார். இதேநிலை நீடித்தால் மேட்டூர் அணைக்கு வேகமாக தண்ணீர் வந்து, விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் விரைவில் பூர்த்தியாகும். ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்தநிலையில் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ள விஷயத்தில் உரிய சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்
  என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai