சுடச்சுட

  

  ரமலான் பண்டிகையை முன்னிட்டு திருவாரூரில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை சனிக்கிழமை காலை நடைபெற்றது.
  தமிழகத்தில் ரமலான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்ததையடுத்து, பல்வேரு இடங்களில் ரமலான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
  திருவாரூர் அருகே புலிவலம் ஜின்னாதெருவில் உள்ள திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற ரமலான் தொழுகையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொழுகையின் நிறைவில் ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர். மேலும், விவசாயிகள் எல்லா வளங்களும் பெற வேண்டி பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
  மன்னார்குடியில்...
  மன்னார்குடியில் ஈகைப் பெருநாளையொட்டி, அனைத்து பள்ளிவாயில்களின் சார்பில், ஒரே இடத்தில் கூட்டுத்தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.
  இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ஈகைப் பெருநாள் என அழைக்கப்படும், ரம்ஜான் பண்டிகையையொட்டி, மன்னார்குடியில் உள்ள அனைத்துப் பள்ளிவாயில்களைச் சேர்ந்த ஐக்கிய ஜமாத் சார்பில், பெரிய கடைத்தெருவில் உள்ள ஈத்கா மைதானத்தில், கூட்டுத்தொழுகை நடைபெற்றது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு, தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர், ஒருவரையொருவர் ஆரத்தழுவி ஈகைப் பெருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அத்துடன், நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு, பிரியாணி வழங்கி உபசரித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
  முத்துப்பேட்டையில்...
  ரமலான் பண்டிகையை முன்னிட்டு, முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கிளை சார்பில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
  முத்துப்பேட்டை தெற்குத்தெரு தவ்ஹீத் ஜமா அத் பள்ளிவாசல் திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கிளைத் தலைவர் முகமது மீரா லெப்பை நடத்தினார். இதில், திரளான இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர்.
  இதேபோல், புதுத்தெரு ஏ.எஸ்.என். திடலிலும் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் தொழுகை முடிந்ததும் மாவட்டப் பேச்சாளர் உமர் முஸ்தபா மார்க்க சொற்பொழிவாற்றினார்.
  இதில், இப்பகுதி தவ்ஹீத் ஜமா அத் கிளைத் தலைவர் முகம்மது அன்சாரி, செயலாளர் முகம்மது யூசுப், பொருளாளர் புஹாரி, துணைச் செயலாளர் சாகுல் ஹமீது உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
  இதேபோன்று, ஆசாத்நகர் நடுமில்லில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமா அத் மாவட்ட துணைத் தலைவர் அன்சாரி, கிளைப் பொறுப்பாளர்கள் அப்துல் அஜீஸ், பிர்தொவ்ஸ்கான், நஜிபுதீன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai