சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், வலங்கைமான் பகுதிகளில் ரம்ஜான் பெருநாள் சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
    நீடாமங்கலம் கீழத்தெரு பள்ளிவாயில், கடைத்தெரு பள்ளிவாயில், பழைய நீடாமங்கலம் பள்ளிவாயில், கோயில்வெண்ணி பள்ளிவாயில், வலங்கைமான் பள்ளிவாயில், ஆவூர், கோவிந்தகுடி பள்ளிவாயில், ஆலங்குடி பள்ளிவாயில், கொட்டையூர் சர்வமான்யம் பள்ளிவாயில் உள்ளிட்ட பள்ளிவாயில்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
    இதேபோல், நீடாமங்கலம் காமராசர் நகரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், திரளானோர் கலந்துகொண்டனர். ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai