சுடச்சுட

  

  திருவாரூர் அருகே  எண்ணக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வில் அதிக விழுக்காடு தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
  10 மற்றும் 12 -ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக விழுக்காடு தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது.
  விழாவுக்கு தலைமை ஆசிரியர் ஜி. தியாகராஜன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், பெற்றோர்ஆசிரியர் கழகத் தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் பா. பாண்டியன், பொருளாளர் கோ. ராமதாஸ் ஆகியோர் பாராட்டி பேசினார்.
  முன்னதாக,  உதவி தலைமையாசிரியர் சேதுராமன் வரவேற்றார். தமிழாசிரியை செந்தமிழ் நளினி நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai