Enable Javscript for better performance
குடும்ப நல மேம்பாட்டுப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் மனவளக்கலை மன்றம் சார்பில் குடும்ப நல மேம்பாட்டுப் பயிற்சி சனிக்கிழமை  நடைபெற்றது.
    மன்ற முன்னாள் தலைவர் என். கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில், பேராசிரியர்கள் காத்தமுத்து, உமா ஆகியோர் மகரிஷியின் தத்துவப் பாடல்களைப் பாடினர். பெண்களின் மேம்பாடு குறித்து திருச்சி பேராசிரியர் அமுதா ராமானுஜம், ஆசிரியர் சேதுரத்தினம், குழந்தை வளர்ப்பு முறைப்பற்றி கும்பகோணம் டாக்டர் கோ. சாம்பசிவம் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
    திருமணத்திற்கு முன் ஆண், பெண் உடல் நலமும் மனவளமும், கணவன் மனைவி உறவின் மேன்மையும் குடும்ப அமைதியும், கார்ப்ப கால பொறுப்புகள், குழந்தை வளர்ப்பும் குழந்தையின் முதல் உணவும், முதுமையில் உடல் நலமும் மனவளமும் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. துணைப் பேராசிரியர்சுவாமிநாதன், மன்றத் தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai