சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை மழை பெய்தது.
    தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது. இதையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மந்தமான வானிலை நிலவுகிறது. சில இடங்களில் லேசானது முதல் பலத்த மழையும் பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை காலையில் முடிவடைந்த 24 மணிநேர நிலவரப்படி, குடவாசலில் அதிகபட்சமாக 14.8 மி.மீ., மழை பெய்துள்ளது.
    மற்ற இடங்களில் மழையளவு விவரம் :  நீடாமங்கலம் 12.2 மி.மீ., மன்னார்குடி 6 மி.மீ., பாண்டவையார் தலைப்பு 4.6 மி.மீ., நன்னிலம் 4.2 மி.மீ., மற்றும் திருவாரூர் 2.4 மி.மீ., என மொத்தம் 44.2  மி.மீ., மழையும், சராசரியாக 4.91 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai