சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக ஆ. பரிமளா அண்மையில் பொறுப்பேற்றார்.
  வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்த மு. தவமணி, 2017-18-ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற கலந்தாய்வு பணியிட மாறுதலில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், படப்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்த ஆ. பரிமளா, வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டடார். இதன்பேரில், அண்மையில் அவர் வலங்கைமான் பள்ளி தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் சா. குணசேகரன் சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தலைமை ஆசிரியர் (பொறுப்பு) யு. வெற்றிவேலன் மற்றும் ஆசிரியர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai