சுடச்சுட

  

  முத்துப்பேட்டை அரபு சாஹிப் பள்ளிவாயிலில் கந்தூரி விழா தொடக்கம்

  By DIN  |   Published on : 18th June 2018 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குத் தெரு அரபு சாஹிப் ஆண்டவர் பள்ளிவாயில் கந்தூரி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
  முத்துப்பேட்டை அரபுசாஹிப் ஆண்டவர் பள்ளிவாயிலில் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்த நாள், கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இதேபோல், நிகழாண்டு விழா கமிட்டியினர் முன்னிலையில், பள்ளிவாயிலிலிருந்து கந்தூரி பூ பல்லக்கு ஊர்வலம்  புறப்பட்டது. இதில், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 2 பல்லக்கு, கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட 2 ரதங்கள், நாட்டியக் குதிரைகள் இடம்பெற்றிருந்தன. 
  இதைத்தொடர்ந்து, பேட்டை ரோடு, முகைதீன் பள்ளித் திடல், பட்டுக்கோட்டை சாலை, பங்களா வாசல், புதிய பஜார், பழைய பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டி சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் சென்று, மீண்டும் அதே வழியாக பெரிய கடைத்தெருச் சென்று மரைக்காயர் தெரு, எஸ்.கே.எம். தெரு வழியாக பள்ளிவாயிலை கந்தூரி ஊர்வலம் வந்தடைந்தது. முன்னதாக, முத்துப்பேட்டை தர்கா முதன்மை அறங்காவலரும், தமிழக தர்காக்கள் முன்னேற்றப் பேரவை நிறுவனத் தலைவருமான எஸ்.எஸ். பாக்கர் அலி சாஹீப் புனித கொடியை ஏற்றி, கந்தூரி விழாவைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தர்கா அறங்காவலர் தமீம் அன்சாரி சாகிப், கந்தூரி விழா கமிட்டி தலைவர் காதர் சுல்தான், ஜமாத் தலைவர் ஓ.எஸ்.எம். ஹனீபா, செயலாளர் பசீர் அகமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  போலீஸ் பாதுகாப்பு : தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் லோகநாதன், திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் மேற்பார்வையில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஜான்ஜோசப், குமார், துணைக் கண்காணிப்பாளர்கள் இனிகோ திவ்யன், அருண், முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ், உதவி ஆய்வாளர் கணபதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai