Enable Javscript for better performance
ரம்ஜான் கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சி 18-ஆவது வார்டில், ரம்ஜான் பண்டிகையையொட்டி, இளந்தென்றல் நற்பணி மன்றம் சார்பில், கலைநிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
    ஆசாத்தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மன்ற நிர்வாகி டி. சிங்காரவேலு தலைமை வகித்தார். இதில், ஆடுதுறை அழகு. பன்னீர்செல்வத்தை நடுவராகக் கொண்டு, சமூக, பண்பாட்டு சிந்தனைகளைப் பெரிதும் தந்தவர்கள், வாழ்ந்த கவிஞர்களா? அல்லது வாழும் கவிஞர்களா? என்ற தலைப்பில் இன்னிசைப் பட்டிமன்றமும்,சிறுவர்களுக்கான இசை நாற்காலி, பானை உடைத்தல், கட்டுரைப் போட்டி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன.
    சிறப்பிடம் பெற்றவர்களுக்கு நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் வி. கண்ணதாசன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். விழாவில், மன்ற நிர்வாகிகள் பி. ஹாஜாமைதீன், எம். சிராஜூதீன், ஷாஜகான், சாதிக்பாட்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai