சுடச்சுட

    

    வலங்கைமான்: 14 திருக்கோயில்களில் புனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு

    By DIN  |   Published on : 18th June 2018 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில் 14 திருக்கோயில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் பரிந்துரையின் பேரில், தலா 1 லட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    வலங்கைமானில், இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை கட்டுப்பாட்டிலும், தமிழக முதல்வரின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழும் உள்ள திருக்கோயில்களான ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில், ஸ்ரீஆலமுத்து அய்யனார் கோயில், ஸ்ரீ ராஜ விநாயகர் கோயில், ஸ்ரீ மதுவன ராமர் கோயில் மற்றும் வலங்கைமான் ஒன்றியத்துக்குள்பட்ட பிற இடங்களில் உள்ள 9 கோயில்கள் என மொத்தம் 14 கோயில்களில் புனரமைப்புப் பணி மேற்கொள்ள உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் பரிந்துரையின் பேரில், தலா ரூ. 1 லட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் அறநிலைய உதவி ஆணையர் கிருஷ்ணன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
    இதைத்தொடர்ந்து, திருப்பணிகள் மேற்கொள்ள விரைவில் டெண்டர் விடப்படும் என ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் நிர்வாக அதிகாரி மு. சிவகுமார், அறநிலைய ஆய்வர் தமிழ்மணி ஆகியோர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai