சுடச்சுட

  

  ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தக் கோரி முற்றுகைப் போராட்டம்: 133 பேர் கைது

  By DIN  |   Published on : 19th June 2018 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் மற்றும் என்எம்ஆர் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 133 பேர் கைது செய்யப்பட்டனர்.
  கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி பராமரிப்பாளர், துப்புரவு பணியாளர்களுக்கு உள்ளாட்சி ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். 
  தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 7-ஆவது ஊதியக் குழு மாற்றங்களை அமல்படுத்தி, நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். 2000- ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட ஓஎச்டி ஆபரேட்டர்களை ஊதிய மாற்றம் செய்து நிரந்தரப்படுத்த வேண்டும். 2013-இல் பணி நியமனம் செய்யப்பட்டு, 2016-இல் மூன்றாண்டு முடித்த துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
  சங்க மாவட்டத் தலைவர் கே. கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலர் டி. முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற 20 பெண்கள் உள்பட 133 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai