சுடச்சுட

    

    திமுக தலைவர் கருணாநிதியின் 95-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூரில் ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
    திருவாரூர் நகர் பகுதிக்குள்பட்ட 21-ஆவது வார்டில்  திமுக உறுப்பினர் மணிமாறன் தலைமையில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அப்பகுதியில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக   மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன் பெண்களுக்கு புடவைகள், பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு தொகைகளை திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் வழங்கினார். நிகழ்ச்சியில் கட்சியின் நகரச் செயலாளர் பிரகாஷ்,  நகர மன்ற முன்னாள் துணைத் தலைவர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai