சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே திங்கள்கிழமை கார் மோதி இரு மாணவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். 
    மன்னார்குடி அருகேயுள்ள ஆலங்கோட்டை பிரதான சாலையை சேர்ந்தவர்கள் செல்வராஜ் மகன் மணிக்கண்டன் (21), அரசு மகன் தினேஷ் (19), கோவிந்தராஜ் மகன் உதயகுமார் (19). இவர்களில் மணிகண்டன் தொழிற் பயிற்சி நிலையத்தில் படித்து முடிந்துள்ளார். தினேஷ் தஞ்சை அருகே பூண்டியில் உள்ள தனியார் கல்லூரி படித்து வந்தார். உதயகுமார் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.
    இவர்கள் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் மன்னார்குடிக்கு வந்து விட்டு ஊருக்கு மன்னார்குடி-பட்டுக்கோட்டை சாலை, கீழநாகை என்ற இடம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த கார் மோதி தூக்கிவீசப்பட்டனர். இதில், பலத்த காயமடைந்த மூவரில் மணிகண்டன், தினேஷ் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். உதயகுமார் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மன்னார்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai