• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்

குறைந்துவரும் விதை முகூர்த்த கொண்டாட்டங்கள்

By சி. ராஜசேகரன்  |   Published on : 19th June 2018 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

கிராமங்களில் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையிலும், விவசாயத்தை உயிர்ப்பிக்கும் வகையிலும் நடத்தப்படும் விதை முகூர்த்தக் கொண்டாட்டங்கள் மேட்டூர் அணையிலிருந்து குறித்த நேரத்துக்கு தண்ணீர் வராததாலும், பருவம் தவறி பெய்யும் மழையாலும் குறைந்து வருகின்றன. 
 ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதே நேரத்தில் தென்மேற்குப் பருவமழையும் பெய்யத் தொடங்கும். எனவே, மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஆறு, வாய்க்கால்கள் வழியாக வேகமாகச் செல்லத் தொடங்கும். இதையடுத்து, விவசாயிகள் சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளை நிறைவு செய்வர். 
விதை முகூர்த்தம்...
வயல்களில் விதை தெளிக்கும் முன்பாக நல்ல நாள் ஒன்றை தேர்வுசெய்து ஊர் கூடி விதை முகூர்த்தம் செய்ய கிராமங்களில் அறிவிப்பு செய்யப்படும். பொதுவாக, கிராமங்களில் முந்தைய ஆண்டில் விளைந்த நெல்மணிகளில் தரமானவற்றை விதைகளுக்காக வைத்திருப்பது வழக்கம்.  இந்த விதைகள், அர்ச்சனைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு, அதிகாலையிலேயே பொதுவான இடத்துக்கு விவசாயிகள் வருவர்.  
அங்கு பூஜைகள் செய்த பிறகு, ஏற்கெனவே தயாராக அமைக்கப்பட்டிருக்கும் சிறிய பாத்தியில் அனைவரும் தங்கள் விதைகளை தெளிப்பர். இந்த விதைகளை தெளிப்பதற்காக தங்கள் குழந்தைகளை  அதிகாலையிலேயே  அழைத்து வந்திருப்பர். காரணம் அவர்கள்  கையால் விதைகள் தெளிக்கும்போது, விளைச்சல் அதிகமாக  இருக்கும் என்ற நம்பிக்கையாகும். அதேபோல், சிலர் முதியவர்களையோ, வயல்களில் அந்த ஆண்டு முழுவதும் பணி செய்யும்  இருக்கும் தொழிலாளர்களையோ முதலில் விதை தெளிக்கச்  சொல்வதும் உண்டு.  
 இதன்மூலம்  விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களிடையே ஒற்றுமை, சகோதர மனப்பான்மை வளர்கிறது. அத்துடன், சாகுபடியை நல்லமுறையில், அதிக விளைச்சல் வரும் வகையில் வேலை செய்யவேண்டும் என்ற எண்ணத்தை தொழிலாளர்களிடையே ஏற்படுத்துகிறது.  தவிர, சிறுவர்களும், இளைஞர்களும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்படுவதால்,  அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தின் மீது  ஆர்வத்தையும்,  நம்பிக்கையையும் ஏற்படுத்தப்படுகிறது. 
மேலும், பாத்திக்கட்டி தெளிக்கப்படும் விதையானது, வளர்ந்த பிறகு கால்நடைகள் அவற்றை உண்ணும். அவற்றுக்கு எவ்வித தடையும் இருக்காது. இதன் பின்னர்,  விவசாயிகள் தங்கள் வயல்களில் எப்போது வேண்டுமானாலும் விதை தெளித்து பணிகளை தொடங்குவர். 
குறைந்துவரும்  கொண்டாட்டங்கள்...
ஆனால், இவையெல்லாம் தண்ணீர் முறையாக வந்து, குறுவை தொடங்கினால் மட்டுமே சாத்தியம். கர்நாடகம் கை விரிப்பதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் உரிய நேரத்தில் வராதபட்சத்தில் விவசாயிகள் தங்கள் சாகுபடியை காலம் கடந்து தொடங்குவர். சிலர் சாகுபடியை கைவிடுவர்.  இதனால்,  விவசாயப் பணிகள் தற்போது ஒருங்கிணைந்து செய்யப்படுவதில்லை. அத்துடன் விவசாயத் தொழிலாளர்களும் மாற்றுப் பணிகளைத் தேடி சென்று விடுவதால் ,  விதை முகூர்த்தக் கொண்டாட்டங்கள் குறைந்துவருகின்றன. 
இதுகுறித்து, கொத்தங்குடியைச் சேர்ந்த விவசாயி வி. கோபாலகிருஷ்ணன் கூறியது:
எனக்கு 74  வயதாகிறது. எனக்கு தெரிந்து பல ஆண்டுகளாகவே விதை முகூர்த்தம் நடைபெற்று வருகிறது. கடைசியாக 7 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தினோம். இந்த மாதத்துக்குள் தண்ணீர் வந்தால் இந்த ஆண்டு விதை முகூர்த்தம் நடைபெற வாய்ப்புள்ளது. என்னுடைய  இளம் வயதில் விதை முகூர்த்தம் என்பது மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும். இதற்காக, ஒருவாரமாக பறை அடித்து ஊர் முழுக்க அறிவிப்பார்கள். விதை முகூர்த்த நாளன்று காலை 4 மணிக்கெல்லாம் எழுப்பி, அழைத்து வருவார்கள். சிறுவர்களும், இளைஞர்களும் பயபக்தியோடு, விதைகளுக்கு மரியாதை செய்வதை தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்போம். பிறகு, விதை நெல்லை கொடுத்து தெளிக்கச் சொல்வார்கள். சிலர் கைக்குழந்தையைக் கூட அழைத்து வந்து அவர்கள் கையில் நெல்லை வைத்து தெளிக்கச் செய்வர். ஆனால், தற்போது இந்த கொண்டாட்டங்கள் எதுவும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விதை முகூர்த்தத்தில் கூட குறைவான அளவு விவசாயிகளே பங்கேற்றோம். பெரும்பாலான இளைஞர்கள் வெளியூர்களில் இருப்பதால், அவர்களை அழைக்க முடிவதில்லை என்றார்.
மீண்டும் முயற்சி...
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கத்தில் 12 ஆண்டுகளாக நெல்  திருவிழா  நடத்தி வரும்  கிரியேட்-நமது  நெல்லைக் காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர்  நெல் ஜெயராமன் கூறியது:    
சாகுபடியை தொடங்கும் முன்னர்  நல்லேறு பூட்டுதல்,  விதை முகூர்த்தம் ஆகியவை கலாசாரத்தைப் போற்றும் வகையில் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், தற்போது இவையெல்லாம் மறைந்து வருகின்றன. இவற்றை மறக்கக்கூடாது என்பதற்காகவே  நெல் திருவிழாவை தொடங்கினோம்.  தற்போது பல இடங்களில் இந்த  நெல் திருவிழா நடைபெற்று வருகிறது. சாகுபடியை தொடங்கும்போது நல்ல நாளில் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே  இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதேபோல் அறுவடை கூட நல்ல நாளில் தொடங்க வேண்டும்  என்ற வகையில், தற்போது சில இடங்களில் அறுவடைத் திருவிழாவை நடத்தத் தொடங்கியுள்ளனர். இதுபோன்று ஆங்காங்கே  நடைபெற்று வரும் கலாசார நிகழ்ச்சிகளே விவசாயத்தை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன என்றார்.
 கிராமங்களில் உயிர் வாழும் விவசாயத்தை உயிர்ப்போடு வைக்க வேண்டியது அவசியம். ஊர் கூடி ஒற்றுமையோடு செய்த சாகுபடி, தற்போது எந்திரங்கள் உதவியுடன்  செய்யப்படுகின்றன.  அன்பையும் , நம்பிக்கையையும்  ஊட்டி  வளர்க்கப்பட்ட பயிர்கள், தற்போது ரசாயன உரங்கள் உதவியுடன் வளர்கின்றன. விவசாயத்தை மீட்டெடுக்க பாரம்பரிய கலாசார கொண்டாட்டங்களை மீண்டும் ஏற்படுத்தி, இளைஞர்களுக்கு விவசாயத்தின் மீது ஆர்வத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்