சுடச்சுட

  

  குற்ற வழக்கில் தொடர்புடையவர் மருத்துவமனையிலிருந்து தப்பியோட்டம்

  By DIN  |   Published on : 19th June 2018 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் ஏற்பட்ட அரிவாள் வெட்டு வழக்கில் தொடர்புடையவர் மருத்துவமனையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு தப்பியோடினார். 
  மன்னார்குடி அருகேயுள்ள மேலநத்தத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது நண்பர் கண்ணாரப்பேட்டையை சேர்ந்த த. வெங்கடேசன். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அசோக்குமாரிடம் வெங்கடேசன் ரூ. ஒரு லட்சம் கடன் வாங்கினார். 
  இந்நிலையில், வெங்கடேசன் கடன் தொகையை திருப்பி தராமல் தாமதித்து வந்தது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், ஜூன் 16-ஆம் தேதி, இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 
  இருதரப்பினரும் அரிவாள், உருட்டுக்கட்டையுடன் மோதிக்கொண்டதில், வெங்கடேசனுக்கும் அவரது சகோதரர் கனகசபைக்கும் அரிவாள் வெட்டு விழுந்து, காயமடைந்து இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இத்தாக்குதலில் காயமடைந்ததாக கூறி, அசோக்குமார்  அவரது ஆதரவாளர்கள் ஆனந்தராஜ், தினேஷ் ஆகிய மூவரும் மன்னார்குடி பாலகிருஷ்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
  இதுகுறித்து, பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில், அசோக்குமார், ஆனந்தராஜ்,தினேஷ், குரும்பையன், சக்திவேல் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அசோக்குமார் உள்ளிட்ட மூவரும் மருத்துவமனையிலிருந்து தப்பிச்செல்லாமல் இருக்க அவர்கள் சிகிச்சைப் பெறும் தனியார் மருத்துவமனையில் தலைமை காவலர் சண்முகநாதன் தலைமையில், வாசுதேவன், சாஹாபுதீன், முகமதுமைதீன் உள்ளிட்ட நான்கு பேர் ஞாயிற்றுக்கிழமை இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மருத்துவமனையின் 2-ஆவது தள அறையிலிருந்த அசோக்குமார், மருத்துவமனை மாடியிலிருந்து அருகிலிருந்த வீட்டு மொட்டை மாடியில் குதித்து தப்பியோடினாராம். 
  இதுகுறித்து பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் அசோக்குமாரை தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai