சுடச்சுட

    

    கூத்தாநல்லூரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 19th June 2018 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூத்தாநல்லூர் நகராட்சியில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என, காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ். சிகாபுதீன் வலியுறுத்தியுள்ளார்.
    இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கை:
    கூத்தாநல்லூர் நகராட்சி 6-ஆவது வார்டில் உள்ள ஜமாலியாத் தெரு மற்றும் குறுக்குத் தெரு சாலை நீண்ட நாள்களாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், இந்தத் தெருக்களில் வசிக்கும் சுமார்150 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு செல்வது போன்ற அவசர நேரங்களில் வாகனங்களை வேகமாக இயக்கமுடிவதில்லை. அத்துடன் தெரு விளக்குகள் வசதிகளும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் வருவோர் சிரமப்படுகின்றனர்.
    எனவே, இந்த சாலையை சீரமைத்து, தெரு விளக்குகள் வசதி செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai