Enable Javscript for better performance
சாலைப் பாதுகாப்பு, முதலுதவி விழிப்புணர்வு ஒத்திகை- Dinamani

சுடச்சுட

    

    கொரடாச்சேரி ஒன்றியம், பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சாலைப் பாதுகாப்பு மற்றும் முதலுதவி விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
    பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் முதலுதவி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருவாரூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கக் கிளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளித்து அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எவ்வாறு அழைத்துச் செல்வது என்பது தொடர்பாக ஒத்திகை நடத்தப்பட்டது.  
    இதில் திருவாரூர் கோட்டாட்சியர் முருகதாஸ், செஞ்சிலுவை சங்கத் தலைவர் ஆர்.எஸ். ராஜ்குமார், செயலாளர் ஜெ. வரதராஜன், கிளை மேலாளர் திருமலைநாதன், ஜெ.ஆர்.சி. மாவட்ட கன்வீனர் செந்தில்குமார், பள்ளி தலைமை ஆசிரியை ஜெ. ஜெயந்தி, ரெட்கிராஸ் மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai