Enable Javscript for better performance
சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகேயுள்ள கோட்டூரில் சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் (ஏஐடியூசி) கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு விற்பனைக்காகவும், கட்டுமானப் பணிகளுக்காகவும் லாரிகளில் கொண்டு வரப்படும் அரசு மற்றும் அம்மா சிமென்ட் மூட்டைகளை ஊராட்சி ஒன்றிய அலுவலக குடோனில் வைக்க இறக்கி, ஏற்றும் பணியில் ஏஐடியூசி சார்பு சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள். 
    கடந்த சில நாள்களாக, சிமென்ட் மூட்டைகள் வேறு இடங்களில் இறக்கி வைக்கப்பட்டதால், வழக்கமாக சுமை இறக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனராம். இதுகுறித்து ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததையடுத்து, ஏஐடியூசி கிளைத் தலைவர் காத்தையன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி பிரதான சாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
    தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற கோட்டூர் காவல் நிலைய போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய சுமுகப் பேச்சுவார்த்தையையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai