Enable Javscript for better performance
செங்கல்லால் தாக்கி காயமடைந்த மனைவி சாவு: கணவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே செங்கல்லால் தாக்கி காயமடைந்த மனைவி உயிரிழந்ததையடுத்து, அவரது கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
    கோட்டூர் அருகேயுள்ள பெரியகுருவாடியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(55). இவரது மனைவி சாவித்திரி(50). தம்பதியரிடையை குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம். வழக்கம்போல், ஜூன் 5-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் மனைவி சாவித்திரியை செங்கல்லால் தாக்கியதில், பலத்த காயமடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி சாவித்திரி ஜூன் 10-ஆம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து, பாலசுப்பிரமணியன் மகன் பாரதி, விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai